நீரின்றி அமையாது உலகு நாளை உலக தண்ணீர் தினம் போட்டிகளில் பங்கேற்க வேளாண் பல்கலை அழைப்பு
கோவை,: உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவியருக்கு பல்வேறு போட்டிகளில் பங்கேற்க, கோவை, வேளாண் பல்கலை அழைப்பு விடுத்துள்ளது.
ஆண்டுதோறும் மார்ச் 22ம் தேதி (நாளை) உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டுக்கான கருப்பொருள், பனிப்பாறை பாதுகாப்பு.
வேளாண் பல்கலையின் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில், 2025ம் ஆண்டுக்கான உலக தண்ணீர் தினம் பிரமாண்டமாகவும், அறிவியல் ரீதியாகவும் கொண்டாடப்பட உள்ளது.கால நிலை மாற்றம், உலகளாவிய நீர் நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதில், பனிப்பாறை பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இதற்கான கூட்டு முயற்சிகளை ஊக்குவிக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஓவியம், சொற்பொழிவு, கட்டுரை எழுதுதல் மற்றும் மாதிரி கண்காட்சி போன்ற நீரைக் கருப்பொருளாகக் கொண்ட மாவட்ட அளவிலான போட்டிகள் நடக்க உள்ளன.
வேளாண் பல்கலை வளாகத்தில் நாளை காலை 9:00 மணிக்குள், உலக தண்ணீர் தின போட்டிகளில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்கலாம். இந்நாளில், பனிப்பாறை பாதுகாப்பு குறித்த பெரிய அளவிலான மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
மேலும் விவரங்களுக்கு, 95002 12743, 90439 83337 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும்
-
ஊழலையும், முறைகேடையும் மறைக்கவே மொழி பிரச்னை: அமித்ஷா
-
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு நேரக்கட்டுப்பாடு ஏன்; ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்
-
ஐபிஎல் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்ற யப் டிவி
-
ரூ.2.5 லட்சம் லஞ்சம் வாங்கிய டில்லி எஸ்.ஐ., கைது: தமிழக ஹவாலா கும்பலுடன் தொடர்பு அம்பலம்
-
பள்ளி மாணவர்களுக்குள் மோதல்; மூவருக்கு கத்திக்குத்து
-
கவுரவ விரிவுரையாளருக்கு கல்லூரி துணை முதல்வர் பாலியல் தொல்லை: போலீஸ் ஸ்டேசன் முற்றுகையிட்ட மாணவர்கள்