வன்முறைகள் குறித்து துளசி கருத்து: வங்கதேசத்தின் விமர்சனமும், அமெரிக்கா பதிலும்!

வாஷிங்டன்: வங்கதேசத்தில் சிறுபான்மையினர் துன்புறுத்தல் செய்யப்படுவதாக, அமெரிக்க உளவுத் துறை இயக்குனர் துளசி கப்பார்ட் கூறிய கருத்திற்கு வங்க தேசத்தின் விமர்சனத்திற்கு அமெரிக்கா பதிலடி கொடுத்துள்ளது.


வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. வங்கதேசத்தில் சிறுபான்மையினர் துன்புறுத்தல் செய்யப்படுவதாக, அமெரிக்க உளவுத் துறை இயக்குனர் துளசி கப்பார்ட் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு துளசி கபார்ட்டை வங்கதேச அரசு விமர்சித்துள்ளது. இது தவறானது என்று குற்றம் சாட்டி உள்ளது.


இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் கூறியதாவது: அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய முகமது யூனுஸ் தலைமையிலான அரசாங்கத்தின் நடவடிக்கைகளை வரவேற்கிறோம். எந்தவொரு நாட்டிலும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை சம்பவங்களை அமெரிக்கா கண்டிக்கிறது.


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் முகமது யூனுஸ் தலைமையிலான பங்களாதேஷ் இடைக்கால அரசாங்கத்திற்கும் இடையே பேச்சுவார்த்தைகள் இப்போதுதான் தொடங்கிவிட்டாலும், இஸ்லாமிய பயங்கரவாதம் தொடர்ந்து கவலைக்குரிய மையமாக உள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement