அருங்குன்றம் - -தண்டரை சாலை விரிவாக்கம் செய்ய வலியுறுத்தல்

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த அருங்குன்றம் - தண்டரை சாலை, 8 கி.மீ., துாரம் உள்ளது. திருநிலை, ஒரகடம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இச்சாலையில் பெரியாண்டவர் கோவில், பொறியியல் கல்லுாரி, தனியார் பள்ளி ஆகியவை உள்ளன.
மேலும், இச்சாலை வழியாக திருப்போரூர், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு, மாமல்லபுரம், குன்னப்பட்டு தொழிற்பேட்டை போன்ற முக்கிய பகுதிகளுக்கு, மக்கள் சென்று வருகின்றனர்.
இச்சாலையின் அகலம் குறைவாக உள்ளதால், இரண்டு லாரிகள் எதிரெதிரே செல்லும் போது, சாலையை கடப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
இதனால், சாலையோரம் உள்ள பள்ளங்களில் வாகனம் கவிழ்ந்து, விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. மேலும், ஒரகடம் முதல் தண்டரை வரை, சாலை குண்டும் குழியுமாக உள்ளது.
எனவே, அருங்குன்றம் - தண்டரை சாலையின் அகலத்தை விரிவாக்கம் செய்து மேம்படுத்த, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
கர்நாடகா சட்டசபையில் களேபரம் ; சபாநாயகர் மீது காகிதங்களை வீசி அமளி!
-
பல்லடத்தில் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
-
உலகின் மிக விலை உயர்ந்த நாய்; 50 கோடி ரூபாய்க்கு வாங்கிய இந்தியர்!
-
முதல்வரின் வெளிநாடு பயணத்திற்கு ரூ.7 கோடி செலவு; சந்தேகம் கிளப்பும் துபாய் பயணச்செலவு
-
தமிழக அரசை கண்டித்து போராட்டம் அறிவித்தார் அண்ணாமலை
-
சட்டசபையில் கூட்டல் கழித்தல் கணக்கு; வானதி சிரிப்புக்கு விளக்கம் சொன்ன அமைச்சர்!