கழிவறையின்றி அவதி
கழிவறையின்றி அவதி
வெண்ணந்துார்:வெண்ணந்துார் ஒன்றியத்துக்குட்பட்ட, தொட்டியவலசு பஞ்., கிழக்கு வலசு பகுதியில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவர்கள் நலன் கருதி, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த பெண்கள் கழிவறை கட்டப்பட்டது. உரிய பராமரிப்பில்லாததால், இந்த கழிவறை சில ஆண்டுகளாக
பூட்டியே கிடக்கிறது. இதனால் அப்பகுதி பெண்கள், திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. தொட்டியவலசு பஞ்., கிழக்கு வலசு பகுதியில் பெண்கள் நலன் கருதி, கழிவறையை சுற்றியுள்ள முட்புதர்களை அகற்றி, அவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜி.டி.என். , கல்லூரியில் விளையாட்டு விழா
-
புதுச்சேரியில் உலா வரும் வாழைப்பழ திருடர்கள் சி.சி.டி.வி., காட்சிகள் வைரல்
-
கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கு பெங்களூரு வாலிபர் கைது
-
பேரியாட்ரிக், மெடபாலிக் அறுவை சிகிச்சையில் உடல் பருமன் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு
-
எம்.எல்.ஏ., பிறந்த நாள் முதல்வர் வாழ்த்து
-
ஊராட்சிக்கு வழங்காமல் வீணாகும் வாகனங்கள்
Advertisement
Advertisement