குழந்தைகளின் கற்றல் திறன் அதிகரிப்பு: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: '' காலை உணவுத் திட்டம், குழந்தைகளின் கவனம், நினைவாற்றல் மற்றும் கற்றல் திறனை மேம்படுத்துகிறது,'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: சிந்தனையுடன் திட்டமிடுவது என்பது உடனடி பிரச்னைகளைத் தீர்ப்பது மட்டுமல்ல. நாம் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் சமூகத்தை மாற்றுகிறது.
காலை உணவுத்திட்டம் குழந்தைகளிடையே மருத்துவமனை வருகை மற்றும் கடுமையான நோய்களைக் கணிசமாகக் குறைத்துள்ளது. அதே நேரத்தில் கவனம், நினைவாற்றல் மற்றும் கற்றல் திறனை மேம்படுத்துகிறது. நன்கு ஊட்டமளிக்கப்பட்ட குழந்தை பள்ளியில் சிறப்பாகச் செயல்படுகிறது, இது நீண்டகால சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது.
தமிழகம் கல்வி மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது. இது பாலின விகிதாச்சாரம் மற்றும் பாலின இடைவெளிகளைக் குறைக்க வழிவகுத்தது. அதே தொலைநோக்கு அணுகுமுறையுடன், திராவிட மாடல் அரசு குறிப்பிடத்தக்க, நன்மைகளைத் தரும் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.










மேலும்
-
மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்புக்கு மறுப்பு: ஐகோர்ட் கண்டிப்பு
-
5937 ஏக்கரில் புதிய சதுப்பு நிலக்காடுகள்; தமிழகத்தில் உருவாக்கம்!
-
கேரளாவில் பா.ஜ., நிர்வாகி சுட்டுக்கொலை; ஒருவர் கைது
-
இந்தியாவுக்கு எதிராக போராடுகிறோம் என்று கூறிய ராகுல்; சம்மன் அனுப்பியது சம்பல் கோர்ட்
-
பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை; காரைக்குடியில் பயங்கரம்
-
தாய்நாட்டுக்கு பணம் அனுப்பும் இந்தியர்கள்: மஹாராஷ்டிரா முதலிடம்; கேரளாவுக்கு இரண்டாம் இடம்