ஒடிசாவில் வாட்டி வதைக்கும் வெயில்: பள்ளி நேரத்தில் மாற்றம்

புவனேஸ்வர்: ஒடிசாவில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், பள்ளி குழந்தைகளை அதில் இருந்து பாதுகாப்பதற்காக பள்ளி நேரத்தை காலை 6:30 மணியில் இருந்து காலை 10:30 மணி வரை மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது.
பருவமழை காலம் முடிந்து வெயில் வதைக்க துவங்கி உள்ளது. பல மாநிலங்களில் வழக்கத்திற்கு மாறாக மார்ச் மாதம் துவக்கத்திலேயே, வெப்பநிலை அதிகரித்து நிலைமை மோசமாக காணப்படுகிறது. இந்நிலையில், ஒடிசாவில் வெயிலின் கடுமையில் இருந்து பள்ளிக் குழந்தைகளை காக்க, பள்ளி நேரத்தை அம்மாநில அரசு மாற்றி அமைத்து உள்ளது. 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு காலை 6:30 மணி முதல் காலை 10:30 மணி வரை மட்டுமே வகுப்புகள் செயல்படும் எனவும், இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அரசின் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
மேலும்,
* அனைத்து பள்ளிகளிலும் குடிநீர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
* தேவைப்படும் இடங்களில் பள்ளி வளாகத்திற்குள் ஓஆர்எஸ் பாக்கெட்கள் வைக்க வேண்டும்.
* குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போது தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்வதை உறுதி செய்ய பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எனவும் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது. வானிலையை கண்காணித்து பள்ளி நேரத்தை மாற்றி அமைக்கவும் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

மேலும்
-
மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்புக்கு மறுப்பு: ஐகோர்ட் கண்டிப்பு
-
5937 ஏக்கரில் புதிய சதுப்பு நிலக்காடுகள்; தமிழகத்தில் உருவாக்கம்!
-
கேரளாவில் பா.ஜ., நிர்வாகி சுட்டுக்கொலை; ஒருவர் கைது
-
இந்தியாவுக்கு எதிராக போராடுகிறோம் என்று கூறிய ராகுல்; சம்மன் அனுப்பியது சம்பல் கோர்ட்
-
பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை; காரைக்குடியில் பயங்கரம்
-
தாய்நாட்டுக்கு பணம் அனுப்பும் இந்தியர்கள்: மஹாராஷ்டிரா முதலிடம்; கேரளாவுக்கு இரண்டாம் இடம்