ரூ.1,000 கோடி முறைகேடுக்கு நான் தான் போராடனும்; அண்ணாமலை அல்ல: சீமான்

மதுரை: ரூ.1000 கோடி முறைகேடு புகாரில், அண்ணாமலை தம்பி நீங்க போராடக் கூடாது. நாங்க தான் போராட வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
இது குறித்து சீமான் கூறியதாவது: ரூ.1000 கோடி இந்த டாஸ்மாக் கடையில் ஊழல்.இதில் உங்களது கருத்து என்ன? தம்பி அண்ணாமலை வந்து இந்த ரூ.1000 கோடி ஊழலை எதிர்த்து போராடுகிறார். நான்தான் போராட வேண்டும். தம்பி போராடக் கூடாது. முழுமையாக இந்த நாட்டை ஆளும் அதிகாரத்தில் இருப்பவர்கள் போராடக்கூடாது.
ரூ.150 கோடி ஊழல் எனக் கூறி தான் அரவிந்த் கெஜ்ரிவாலை உள்ளே வைத்தீர்கள்? அவர் பதவியில் இருந்து விலகி இன்னொருவரை முதல்வர் ஆக்கும் நிலையை உருவாக்கினீர்கள். இதே மாதிரி குற்றச்சாட்டில் தான் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகளை கைது செய்தீர்கள்?
இங்கே நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது அர்த்தமற்றதாக இருக்கிறது. நாங்கள் போராடலாம். நீங்க போராடக்கூடாது. நீங்கள் தான் சோதனை நடத்தி ரூ.ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக தெரிவித்தீர்கள். அதற்கு எடுத்த நடவடிக்கை என்ன?
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சொன்னால் மத்திய அரசுதான் நடத்த வேண்டும் என்று சொல்கிறார்கள். பிறகு எதற்கு மாநில உரிமை பற்றி பேசுகிறார்கள். பீஹார், தெலுங்கானாவால் எடுக்க முடிகிறது. இங்கு எடுக்க முடியாதா? மாநில உரிமைக்காக போராடிய ஒரே கட்சி என்று சொல்கிறீர்கள். எங்கே அந்த மாநில உரிமை. இட ஒதுக்கீடு கொடுப்பதற்கு இருக்கும் அதிகாரம், ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுப்பதற்கு இல்லையா?
நீங்கள் கூட்டணி வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சி உடனே எடுக்கிறது. தேர்தல் வரும்போது பழைய வேசத்தை கலைத்துவிட்டு, புது நடிகராக வந்து விடுகிறார்கள். இவ்வாறு சீமான் கூறினார்.











மேலும்
-
மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்புக்கு மறுப்பு: ஐகோர்ட் கண்டிப்பு
-
5937 ஏக்கரில் புதிய சதுப்பு நிலக்காடுகள்; தமிழகத்தில் உருவாக்கம்!
-
கேரளாவில் பா.ஜ., நிர்வாகி சுட்டுக்கொலை; ஒருவர் கைது
-
இந்தியாவுக்கு எதிராக போராடுகிறோம் என்று கூறிய ராகுல்; சம்மன் அனுப்பியது சம்பல் கோர்ட்
-
பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக்கொலை; காரைக்குடியில் பயங்கரம்
-
தாய்நாட்டுக்கு பணம் அனுப்பும் இந்தியர்கள்: மஹாராஷ்டிரா முதலிடம்; கேரளாவுக்கு இரண்டாம் இடம்