கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு
விழுப்புரம் : விழுப்புரம் நித்யானந்தா நகர சாலையில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள நித்யானந்தா நகரில் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் மண் சாலைகளாக உள்ளன.
மேலும், பாதாள சாக்கடை வசதியில்லாததால், கழிவுநீர் கால்வாய் மட்டுமே உள்ளது. கடந்த சில தினங்களாக கழிவுநீர் கால்வாயில் தேங்கி மண் சாலையில் வழிந்தோடி சேறும் சகதியுமாக துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றுவதோடு, பாதாள சாக்கடை வசதியை ஏற்படுத்தி சாலை அமைத்துத் தர வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சரியான திசையில் இந்தியா - சீனா பேச்சுவார்த்தை: வெளியுறவு செயலர்
-
தி.மு.க.,வுக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம்: அண்ணாமலை
-
அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கலாம்; அரசுக்கு சென்னை ஐகோர்ட் யோசனை
-
ஐ.பி.எல்., கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் சலுகை: சென்னை மெட்ரோ ரயில் புது அறிவிப்பு
-
ஹிந்துக்கள் மட்டுமே திருமலை கோயிலில் பணியாற்ற வேண்டும்: சந்திரபாபு நாயுடு
-
ஊழலை மறைக்கவே மொழி பிரச்னை: அமித்ஷா
Advertisement
Advertisement