ஊழலை மறைக்கவே மொழி பிரச்னை: அமித்ஷா

புதுடில்லி: '' ஊழலை மறைக்கவே மொழி பிரச்னையை எழுப்புகின்றனர்,'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. ஹிந்தி திணிக்கப்படுவதாக தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் கூற, பா.ஜ., மறுத்து வருகிறது.
இந்நிலையில் ராஜ்யசபாவில் அமித் ஷா பேசியதாவது: மொழியின் பெயரால் அரசியல் செய்பவர்களின் திட்டம் ஒருபோதும் நிறைவேறாது. அலுவலக மொழிகள் துறையின் கீழ், இந்திய மொழிகள் பிரிவை மோடி அரசு அமைத்து உள்ளது. இந்த துறையானது தமிழ், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, அசாமி உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் மேம்படுத்துவதற்காக செயல்படும்.
டிசம்பர் மாதத்திற்கு பிறகு முதல்வர்கள், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.,க்களுக்கு அவர்களின் மொழிகளில் கடிதம் எழுதுகிறேன். தங்களின் ஊழலை மறைப்பதற்காக மொழியின் பெயரால் அரசியல் செய்பவர்களுக்கு இதுவே எனது பதில்.
அவர்கள் என்ன சொல்கிறார்கள்? தென் மாநில மொழிகளை நாங்கள் எதிர்ப்பதாக சொல்கிறார்கள்? இது எப்படி சாத்தியமாகும்? நான் குஜராத்தில் இருந்து வந்துள்ளேன். நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் இருந்து வந்துள்ளார். எப்படி நாங்கள் அதனை எதிர்ப்போம்? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நாங்கள் மொழிகளுக்காக பணியாற்றி உள்ளோம்.
தமிழக அரசுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான பாடங்களை தமிழி்ல் மொழி பெயர்க்க உங்களுக்கு தைரியம் இல்லை. இதனை இரண்டு ஆண்டுகளாக நான் சொல்லி வருகிறேன். அதை உங்களால் செய்ய முடியாது. தமிழகத்தில் தே.ஜ., கூட்டணி ஆட்சிக்கு வரும்போது, மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழில் வழங்குவோம்.
மொழியின் பெயரால் விஷத்தை பரப்புபவர்களுக்கு, இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான கி.மீ., தொலைவில் உள்ள மொழியை பிடிக்கிறது. ஆனால், இந்திய மொழியை பிடிக்கவில்லை. எந்த இந்திய மொழிக்கும் ஹிந்தி போட்டி கிடையாது என்பதை நான் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறேன். மொழியின் பெயரால் நாட்டில் ஏற்பட்டு உள்ள பிளவு போதும். இனிமேலும் அப்படி நடக்கக்கூடாது.
அனைத்து இந்திய மொழிகளுக்கும் ஹிந்தி நண்பனாக உள்ளது. அனைத்து இந்திய மொழிகளும் ஹிந்தியில் இருந்து பலம் பெறுகிறது. அதேபோல், அனைத்து இந்திய மொழிகளில் இருந்தும் ஹிந்தி பலம் பெறுகிறது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.
வாசகர் கருத்து (35)
Iyer - Karjat,இந்தியா
21 மார்,2025 - 22:12 Report Abuse

0
0
Reply
மதிவதனன் - ,இந்தியா
21 மார்,2025 - 21:59 Report Abuse

0
0
Reply
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
21 மார்,2025 - 21:44 Report Abuse

0
0
Reply
கல்யாணராமன் - Chennai,இந்தியா
21 மார்,2025 - 21:32 Report Abuse

0
0
மதிவதனன் - ,இந்தியா
21 மார்,2025 - 22:01Report Abuse

0
0
Reply
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
21 மார்,2025 - 21:16 Report Abuse

0
0
Reply
Perumal Pillai - Perth,இந்தியா
21 மார்,2025 - 21:03 Report Abuse

0
0
Reply
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
21 மார்,2025 - 21:02 Report Abuse

0
0
Reply
visu - tamilnadu,இந்தியா
21 மார்,2025 - 21:01 Report Abuse

0
0
Reply
srinivasan - chaennal,இந்தியா
21 மார்,2025 - 20:58 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
21 மார்,2025 - 20:31 Report Abuse

0
0
Reply
மேலும் 24 கருத்துக்கள்...
மேலும்
-
உலக ஜிம்னாஸ்டிக்ஸ்: பைனலில் பிரனதி
-
நியூசிலாந்தை வென்றது பாகிஸ்தான்: ஹசன் நவாஸ் சதம் விளாசல்
-
22 ஆண்டுகளாக நிலைத்திருக்கும் ஒரே ரஷ்ய அமைச்சர் இவர்தான்!
-
பிஸ்கட் மட்டும் போதும்; பேக்கரிக்கு விசிட் அடித்த கரடி!
-
இன்னுமா ஜாதியை பற்றி பேசுகிறீர்கள்? ராகுலுக்கு பா.ஜ., கேள்வி
-
பிஸ்கட் மட்டும் போதும்; பேக்கரிக்கு விசிட் அடித்த கரடி!
Advertisement
Advertisement