ஹிந்துக்கள் மட்டுமே திருமலை கோயிலில் பணியாற்ற வேண்டும்: சந்திரபாபு நாயுடு

திருமலை : ஹிந்துக்கள் மட்டுமே திருமலை கோயிலில் பணியாற்ற வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு ஆந்திர சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதையடுத்து 'திருமலையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் ஹிந்துக்களாக இருக்க வேண்டும்,'' என, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத்தின் தலைவர் பி.ஆர்.நாயுடு கடந்தாண்டு நவம்பரில் அறிவித்தார்.
இந்நிலையில் தனது பேரனின் பிறந்த நாளையொட்டி குடும்பத்துடன் திருமலை கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளதாவது:
நாட்டின் அனைத்து மாநில தலைநகரங்களிலும் வெங்கடேஸ்வர சுவாமிக்கு கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒத்துழைப்பு கோரி அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுத உள்ளேன்.
இக்கோயிலில் ஹிந்துக்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும். ஹிந்துக்கள் அல்லாத பிற மதத்தவர்கள் பணியாற்றி வந்தால் அவர்கள் வேறு பணிக்கு மாற்றப்படுவார்கள்.
ஏழுமலையான் வெங்கடேஸ்வர சுவாமியும் அதன் புனிதத்தன்மையும் பாதுகாக்கப்பட வேண்டும். கோவிலில் புனிதமற்ற செயல்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தேவஸ்தான வாரியத்தின் உறுப்பினர்களின் தலையாய கடமை. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (15)
aaruthirumalai - ,
21 மார்,2025 - 21:39 Report Abuse

0
0
Reply
ராஜி - ,
21 மார்,2025 - 21:09 Report Abuse

0
0
Reply
Perumal Pillai - Perth,இந்தியா
21 மார்,2025 - 21:06 Report Abuse

0
0
Reply
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
21 மார்,2025 - 21:04 Report Abuse

0
0
Reply
Easwar Kamal - New York,இந்தியா
21 மார்,2025 - 21:04 Report Abuse

0
0
Reply
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
21 மார்,2025 - 20:05 Report Abuse

0
0
Reply
Amar Akbar Antony - Udumalai kovai,இந்தியா
21 மார்,2025 - 20:00 Report Abuse

0
0
Reply
V Venkatachalam - Chennai,இந்தியா
21 மார்,2025 - 19:59 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
21 மார்,2025 - 19:27 Report Abuse

0
0
பெரிய ராசு - Arakansaus,இந்தியா
21 மார்,2025 - 20:29Report Abuse

0
0
Reply
ManiK - ,
21 மார்,2025 - 19:27 Report Abuse

0
0
Reply
மேலும் 4 கருத்துக்கள்...
மேலும்
-
உலக ஜிம்னாஸ்டிக்ஸ்: பைனலில் பிரனதி
-
நியூசிலாந்தை வென்றது பாகிஸ்தான்: ஹசன் நவாஸ் சதம் விளாசல்
-
22 ஆண்டுகளாக நிலைத்திருக்கும் ஒரே ரஷ்ய அமைச்சர் இவர்தான்!
-
பிஸ்கட் மட்டும் போதும்; பேக்கரிக்கு விசிட் அடித்த கரடி!
-
இன்னுமா ஜாதியை பற்றி பேசுகிறீர்கள்? ராகுலுக்கு பா.ஜ., கேள்வி
-
பிஸ்கட் மட்டும் போதும்; பேக்கரிக்கு விசிட் அடித்த கரடி!
Advertisement
Advertisement