சரியான திசையில் இந்தியா - சீனா பேச்சுவார்த்தை: வெளியுறவு செயலர்

புதுடில்லி: '' இந்தியா - சீனா இடையிலான பேச்சுவார்த்தை சரியான திசையில் சென்று கொண்டு உள்ளது,'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
டில்லியில் மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: இரு தரப்பு வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுத்து செல்லும் நடவடிக்கையை இந்தியாவும் அமெரிக்காவும் துவக்கி உள்ளன. வர்த்தக ஒப்பந்தத்திற்கான கட்டமைப்புகளை உருவாக்க இரு நாட்டு அரசுகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. இந்த ஒப்பந்தம் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதுடன், சந்தை அணுகலை மேம்படுத்தி வரி மற்றும் கட்டண தடைகளை அகற்றுவதை நோக்கமாக கொண்டு உள்ளது. பரஸ்பரம் நன்மை பயக்கும் இரு தரப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு இந்திய அரசு தொடர்ந்து பல்வேறு மட்டங்களுடன் அமெரிக்கா உடன் தொடர்பில் உள்ளது.
அமெரிக்காவில் ஹமாசுடன் தொடர்பில் உள்ளதாக கைது செய்யப்பட்டுள்ள பாதர் கான் சூரி குறித்த விவகாரம் மீடியாவில் மூலம் தெரிந்து கொண்டோம். அமெரிக்க அரசோ அல்லது அவரோ எங்களையோ, இந்திய தூதரகத்தையோ தொடர்பு கொள்ளவில்லை.
பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் தொடர்ந்து அளிக்கும் ஆதரவு மற்றும் நிதியுதவி ஆகியவையே பிரச்னையாக உள்ளது என்பதை அனைவரும் அறிவார்கள். இந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பு ஏற்பட இது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது.
ரஷ்யாவின் கசன் நகரில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் சந்தித்து கொண்டனர். அதன் பிறகு, வெளியுறவுத் துறை அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்தில் ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தை நடக்கிறது. கடந்த ஜனவரி மாதம் வெளியுறவுத்துறை செயலர் சீனா சென்று அந்நாட்டு செயலரை சந்தித்து பேசினார். இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை சரியான திசையில் சென்று கொண்டு உள்ளது.
பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாத அமைப்புகளுக்கு அளித்த ஆதரவு காரணமாகவே இந்தியா மற்றும் கனடா இடையிலான உறவு பாதிக்கப்பட்டு உள்ளது. பரஸ்பர நம்பிக்கை அடிப்படையில் இரு தரப்பு உறவை மேம்படுத்த முடியும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும்
-
அரிசி ஏற்றுமதி 23 சதவீதம் உயர்வுஉள்நாட்டு நுகர்வு பாதிக்கப்படாது
-
ரோட்டில் 'தில்லாக' நிறுத்தப்படும் டூவீலர்அந்தியூரில் போக்குவரத்துக்கு இடையூறு
-
உச்சம் தொட்ட தேங்காய், கொப்பரை சீசன் துவங்கினாலும் மகசூல் 40% சரிவு
-
சமாதான பேச்சில் பெண்ணைதாக்கியவர் சிறையிலடைப்
-
ரயில்வே ஊழியர் ஆர்ப்பாட்டம்
-
ரூ.3.45 லட்சத்துக்குசூரியகாந்தி விதை ஏலம்