பாக்., ஆதரவு வாசகம் எழுதிய இருவர் கைது

2

ராம்நகர் : பாகிஸ்தானுக்கு ஆதரவாக சுவரில் எழுதிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

ராம்நகர், பிடதியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றின் சுவரில், கடந்த 16ம் தேதி, பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், கன்னடர்களை இழிவுபடுத்தும் விதமாகவும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. இவ்விஷயம் இணையத்தில் பரவி, சர்ச்சையை கிளப்பியது.

இந்த விஷயத்தை அறிந்த சில கன்னட அமைப்பினர், தொழிற்சாலை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இச்சம்பவம் குறித்து, நிறுவனத்தின் சார்பில் பிடதி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணையில், கண்காணிப்பு கேமரா காட்சிகள், ஊழியர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் சிலரை, சுவரில் எழுத வைத்தும் சோதனை நடத்தினர்.

அப்போது, சுவரில் எழுதியது, கர்நாடகாவின் வட மாநிலத்தை சேர்ந்த ஹைமத் ஹூசைன், 24, சாதிக், 20, என்பது தெரியவந்தது. அவர்களை, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.

Advertisement