அரசு பள்ளி வகுப்பறையில் வாலிபர் சடலம்; கழுத்தறுத்து கொன்றது விசாரணையில் அம்பலம்

ஜாம்ஷெட்பூர்: ஜார்க்கண்டில் அரசு பள்ளி வகுப்பறையில் ரத்த வெள்ளத்தில் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
ஜாம்ஷெட்பூர் உலிதிப் பகுதியில் அரசு பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் இரண்டாவது மாடியில் உள்ள வகுப்பறை ஒன்றில் ரத்த வெள்ளத்தில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார்.
இதை அறிந்த ஊர் மக்கள், உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல்கட்ட விசாரணையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் பெயர் சவுரப் சர்மா என்பது தெரிய வந்தது. கழுத்தில் கூர்மையான ஆயுதத்தை கொண்டு கொலை செய்திருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
சம்பவம் நடப்பதற்கு முதல் நாள் தமது குடும்பத்துடன் அவர் செல்போனில் பேசியுள்ளார். அதன் பின்னர் சவுரப் சர்மா வீடு திரும்பவில்லை. இதை தொடர்ந்து குடும்பத்தினர் பல இடங்களில் தேடி உள்ளனர். பலனில்லாத நிலையில் அவர், சடலமாக பள்ளியில் இருந்து கண்டெடுக்கப்பட்டு உள்ளார்.
மேலும்
-
கல்லுாரி மாணவர்களுக்கு ரூ.20,000 மதிப்பில் 'லேப்டாப்'; தங்கம் தென்னரசு விளக்கம்
-
மருத்துவ கருத்தரங்கம்
-
காஞ்சிபுரத்தில் வரும் 25ல் அஞ்சல் குறைதீர் கூட்டம்
-
நெடுஞ்சாலையில் மீடியனை உடைத்து கடைக்கு பாதை; வல்லத்தில் அத்துமீறல்
-
படாளம் சர்க்கரை ஆலை பணம் தராமல் இழுத்தடிப்பு நலன் காக்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு
-
புகார் பெட்டி சேதமான மின் கம்பத்தால் புத்தேரியில் விபத்து அபாயம்