பகுதி நேர ரேஷன் கடை திறக்க மயிலம் எம்.எல்.ஏ., கோரிக்கை

திண்டிவனம் : 'கொடியம்புத்துாரில் பகுதி நேர ரேஷன் கடை திறக்க வேண்டும்' என மயிலம் தொகுதி, பா.ம.க., எம்.எல்.ஏ., சிவக்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் சட்டசபையில் பேசுகையில், 'மயிலம் சட்டசபை தொகுதி, ஒலக்கூர் ஒன்றியத்தில் உள்ள கொடியம்புத்துாரில் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 8 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள இடத்தில், பகுதி நேர ரேஷன் கடையை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

இதற்கு அமைச்சர் சக்கர பாணி பதில் அளித்து பேசுகையில், 'எம்.எல்.ஏ., கோரிக்கையை ஏற்று தகுதி இருப்பின் பகுதி நேர ரேஷன் கடை பிரிப்பதற்கு மாவட்ட கலெக்டரே அனுமதி கொடுக்கலாம். அப்படி இல்லாவிட்டால், அரசுக்கு பரிந்துரை செய்தால், தகுதி இருப்பின் பிரித்து கொடுக்கப்படும்' என்றார்.

Advertisement