அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை

விழுப்புரம் : விழுப்புரம் நகர அ.தி.மு.க., 9வது வார்டு சார்பில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

நகர செயலாளர் ராமதாஸ் தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் வழக்கறிஞர் செந்தில் முன்னிலை வகித்தார்.

முன்னாள் எம்.எல்.ஏ., முத்தமிழ்ச்செல்வன், பூத் கமிட்டி அமைப்பதற்காக நிர்வாகிகளுக்கு விண்ணப்பங்களை வழங்கி, சட்டசபை தேர்தல் நெருங்கு வதால் அ.தி.மு.க., வெற்றிக்காக நிர்வாகிகள் களப்பணியாற்ற வேண்டும் என பேசினார்.

மாவட்ட சிறுபான்மைப் பிரிவு இணைச் செயலாளர் ஜாகீர், நகர பேரவை செயலாளர் பாஸ்கர், பாசறை செயலாளர் அரிகிருஷ்ணன், நிர்வாகிகள் பிரகாஷ், ைஹதர், ரத்தினம், செந்தில், பிரபு, லியாகத்அலி, சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement