மருத்துவ முகாம்

புதுச்சேரி : உப்பளம் தொகுதி நேதாஜி நகர் சமுதாய நல கூடத்தில் திப்புராயப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

முகாமை, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். இதில், பொது சுகாதாரம், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், கண், காது, மூக்கு, தொண்டை, பல் மருத்துவம் சார்ந்த டாக்டர்கள் பங்கேற்று இலவச ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் அளித்தனர்.மாநில தி.மு.க., சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் நோயல், கிளை செயலாளர்கள் ஈசாக், ராகேஷ், பெருமாள், அந்தோணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement