'ஹைட்ரோபோனிக்ஸ்' கஞ்சா ஒரு கிலோ ஒரு கோடி ரூபாய்

ஊட்டி: 'ஊட்டியில் சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 'ஹைட்ரோபோனிக்ஸ்' கஞ்சா, ஒரு கிலோ கோடி ரூபாய் வரை விற்கப்படுகிறது,' என, தெரியவந்துள்ளது.
தமிழக, கேரளா, கர்நாடகா எல்லையில், நீலகிரி மாவட்டம் அமைந்துள்ளது. இதனால், கஞ்சா மற்றும் புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள், பிற மாநிலங்களில் இருந்து, நீலகிரி வழியாக கடத்தப்படுகிறது. இதனை கட்டுப்படுத்துவது போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது.
இந்நிலையில், மூன்று வாரங்களுக்கு முன்பு, ஊட்டி மத்திய பஸ் ஸ்டாண்டில், அப்துல்வகாப்,34, சுஜன்,35, மெல்சர்பால்,35, ஆகியோரிடம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர். அதில், 100 கிராம் 'ஹைட்ரோபோனிக்ஸ்' கஞ்சா இருந்ததால், தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து, எல்லையில் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
நீலகிரி எஸ்.பி.,நிஷா கூறுகையில்,''மண் பயன்படுத்தாமல் தண்ணீரை மட்டுமே அடிப்படையாக கொண்டு சாகுபடி செய்யப்படும் நீரியல் முறையே, 'ஹைட்ரோபோனிக்ஸ்' விவசாய முறையாகும். இந்த முறையில் வீட்டுக்குள் சட்டவிரோதமாக கஞ்சா சாகுபடி செய்வதை, சில கும்பல்கள் பின்பற்றி வருகின்றனர். அதில் போதை மூலக்கூறுகள் அளவுக்கு அதிகமாக இருக்கும் என்பதால், விலை அதிகம்.
ஒரு கிலோ கஞ்சா ஒரு கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இத்தகைய கஞ்சா முதன் முறையாக ஊட்டிக்குள் வந்ததால், மாநில எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.
மேலும்
-
உலக ஜிம்னாஸ்டிக்ஸ்: பைனலில் பிரனதி
-
நியூசிலாந்தை வென்றது பாகிஸ்தான்: ஹசன் நவாஸ் சதம் விளாசல்
-
22 ஆண்டுகளாக நிலைத்திருக்கும் ஒரே ரஷ்ய அமைச்சர் இவர்தான்!
-
பிஸ்கட் மட்டும் போதும்; பேக்கரிக்கு விசிட் அடித்த கரடி!
-
இன்னுமா ஜாதியை பற்றி பேசுகிறீர்கள்? ராகுலுக்கு பா.ஜ., கேள்வி
-
பிஸ்கட் மட்டும் போதும்; பேக்கரிக்கு விசிட் அடித்த கரடி!