பிஸ்கட் மட்டும் போதும்; பேக்கரிக்கு விசிட் அடித்த கரடி!

ஊட்டி,: ஊட்டி புதுமந்து பகுதியில் உள்ள பேக்கரியில், இன்று அதிகாலை புகுந்த கரடி, பிஸ்கட் மட்டும் சாப்பிட்டுவிட்டு சென்றுள்ளது.


நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நகரை ஒட்டியுள்ள புதுமந்து பகுதியில், ஆயிரக்கணகான வீடுகள் உள்ளன. இதனை ஒட்டி வனப்பகுதி உள்ளதால், சிறுத்தை, கரடி, காட்டெருமை நடமாட்டம் உள்ளது. இந்நிலையில், புதுமந்து பகுதியில் பிரபு என்பவரின் பேக்கரியில் அதிகாலை, 4:00 மணிக்கு கதவை உடைத்து புகுந்த கரடி சிறிது நேரம் அமர்ந்திருந்தது. பின், அங்குள்ள பிஸ்கட்களை மட்டும் உட்கொண்ட பின், 4:30 மணிக்கு வெளியே சென்றுள்ளது. இது கடையில் இருந்து 'சிசிடிவி' கேமராவில் பதிவாகி உள்ளது. இதனை பார்த்த கடை உரிமையாளர், வனத்துறைக்கு தகவல் அளித்தார். வனத்துறையின் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement