நியூசிலாந்தை வென்றது பாகிஸ்தான்: ஹசன் நவாஸ் சதம் விளாசல்

ஆக்லாந்து: ஹசன் நவாஸ் சதம் விளாச பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வென்றது.
நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் நியூசிலாந்து வென்றது. ஆக்லாந்தில் 3வது போட்டி நடந்தது. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
மார்க் சாப்மேன் (94), கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் (31) கைகொடுக்க, நியூசிலாந்து அணி 19.5 ஓவரில், 204 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.
பாகிஸ்தான் அணிக்கு முகமது ஹாரிஸ் (41) நல்ல துவக்கம் தந்தார். முதலிரண்டு போட்டியில் 'டக்-அவுட்' ஆன ஹசன் நவாஸ், சிக்சர், பவுண்டகளாக விளாசினார். கேப்டன் சல்மான் ஆகா, 30 பந்தில் அரைசதம் எட்டினார். பென் சியர்ஸ் பந்தில் வரிசையாக 2 சிக்சர் பறக்கவிட்ட நவாஸ், ஜேமீசன் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி சதம் கடந்தார்.
பாகிஸ்தான் அணி 16 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 207 ரன் எடுத்து வெற்றி பெற்றது. நவாஸ் (105 ரன், 45 பந்து, 7 சிக்சர், 10 பவுண்டரி), சல்மான் (51 ரன், 31 பந்து, 2 சிக்சர், 6 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தனர்.
44 பந்தில்...
ஹசன் நவாஸ், 'டி-20' போட்டியில் அதிவேக சதம் (44 பந்தில்) விளாசிய பாகிஸ்தான் வீரரானார். இதற்கு முன், பாபர் ஆசம் 49 பந்தில் (எதிர்: தென் ஆப்ரிக்கா, 2021) இச்சாதனை படைத்திருந்தார்.
அதிவேக 'சேஸ்'
'டி-20' அரங்கில் 200 அல்லது அதற்கு மேலான இலக்கை குறைந்த ஓவரில் (16) 'சேஸ்' செய்த அணியானது பாகிஸ்தான். இதற்கு முன், தென் ஆப்ரிக்க அணி 17.4 ஓவரில் (எதிர்: வெஸ்ட் இண்டீஸ், 2007, ஜோகனஸ்பர்க்), 208 ரன்னை 'சேஸ்' செய்தது சாதனையாக இருந்தது.
நான்காவது வீரர்
'டி-20' அரங்கில், வரிசையாக 2 போட்டியில் 'டக்-அவுட்' ஆகி, அடுத்த போட்டியில் சதம் விளாசிய 4வது வீரரானார் ஹசன் நவாஸ். ஏற்கனவே தென் ஆப்ரிக்காவின் ரிலீ ரோசோவ் (0, 0, 100* ரன், எதிர்: இந்தியா, 2022), இந்தியாவின் ரோகித் (0, 0, 121 ரன், எதிர்: ஆப்கன், 2024), சஞ்சு சாம்சன் (0, 0, 109* ரன், எதிர்: தென் ஆப்ரிக்கா, 2024) இப்படி எழுச்சி கண்டனர்.
இது அதிகம்
பாகிஸ்தான் அணி 'பவர் பிளே' ஓவரில், தனது அதிகபட்ச ரன்னை (75 ரன், 6 ஓவர்) பதிவு செய்தது. இதற்கு முன், 73 ரன் (எதிர்: இங்கிலாந்து, 2016) எடுத்திருந்தது.
மேலும்
-
அ.தி.மு.க., பற்றிய கூட்டல் கணக்கு ஏமாறாமல் இருக்க முதல்வர் வாழ்த்து
-
காங்கிரசை சீரமைக்கும் பிரியங்கா; மாவட்ட தலைவர்களுக்கு கூடுதல் அதிகாரம்
-
தொகுதி மறுவரையறையால் தமிழகம் பாதிக்கப்பட்டால் நாட்டில் கூட்டாட்சிக்கான பொருளே இருக்காது: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
பணிநீக்கமே சரியான நடவடிக்கை!
-
நடிகர் விஷால் தங்கை கணவர் மீது சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு
-
சுகாதார ஆய்வாளர் சங்ககூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்