இன்னுமா ஜாதியை பற்றி பேசுகிறீர்கள்? ராகுலுக்கு பா.ஜ., கேள்வி

புதுடில்லி: '' இன்னுமா ஜாதியை பற்றி லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசிக் கொண்டு உள்ளார்'' என பா.ஜ., கேள்வி எழுப்பி உள்ளது.
நாட்டில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் வலியுறுத்தி வருகிறார். பல கூட்டங்களில் இதனை வலியுறுத்தி பேசி உள்ளார். நேற்று யுஜிசி முன்னாள் தலைவர் சுக்தேவ் தோரட்டுடன் நடந்த கலந்துரையாடலின் போதும், ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி பேசிய ராகுல், இதன் மூலம் நாட்டில் நிலவும் சமத்துவமின்மையை வெளிக் கொண்டு வருவதற்கான முதல்படியாக இருக்கும். உண்மை வெளியே வருவதை விரும்பாதவர்கள் தான் ஜாதி வாரி கணக்கெடுப்பை எதிர்க்கின்றனர் எனக் கூறியிருந்தார்.
இது தொடர்பாக பா.ஜ., எம்.பி., தினேஷ் சர்மா கூறியதாவது: கும்பமேளாவில் ஒருவரும் ஜாதி பற்றி கேட்கவில்லை. யாரும் அவமானப்படுத்தப்படவில்லை. யாருக்கும் டெங்கு அல்லது மலேரியா ஏற்படவில்லை. ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசவில்லை. சனாதன தர்மத்தின் பலத்தை புரிந்து கொள்ளாமல், இன்னமுமா ஜாதி பற்றி பேசிக் கொண்டு உள்ளீர்கள். நீங்கள் தோற்றவர். இன்னமும் பேசிக் கொண்டு இருந்தால் மீண்டும் தோல்வியைத் தான் தழுவுவீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
கொடிக்கம்பம் அகற்றும் விவகாரம் தி.மு.க.,வால் நெருக்கடி: மார்க்., கம்யூ
-
கொலை செய்யப்படாமல் இருப்பதற்கு மக்கள் சந்தோஷப்படலாம்: சீமான்
-
எஸ்.வி.சேகர் சரண் அடைய அவகாசம் அளித்தது கோர்ட்
-
வடக்கின் ஆதிக்கத்திற்கு தமிழகம் தலைவணங்காது; அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம்
-
போலீஸ் மிரட்டலால் ஓட்டம் பிடித்த பா.ஜ.,
-
அ.தி.மு.க., பற்றிய கூட்டல் கணக்கு ஏமாறாமல் இருக்க முதல்வர் வாழ்த்து