மது போதையில் தகராறு: ஆசாமிக்கு 2 ஆண்டு சிறை

கோவை : கோவை மாவட்டம், வால்பாறை, எம்.ஜி.நகரை சேர்ந்தவர் வின்சென்ட்,37. அதே பகுதியை சேர்ந்த பெண்களிடம் மது போதையில் தகராறு செய்து வந்தார். 2023, ஆக., 20ல், மீண்டும் பிரச்னை செய்தபோது, பக்கத்து வீட்டை சேர்ந்த மணிகுமார் என்பவர் மற்றும் பெண்கள் தட்டி கேட்டனர்.

அப்போது, பெண்களை தகாத வார்த்தையால் திட்டினார். வால்பாறை போலீசார் விசாரித்து, வின்சென்டை கைது செய்தனர். அவர் மீது, கோவை மகளிர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

குற்றம் சாட்டப்பட்ட வின்சென்டிற்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி நந்தினிதேவி தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் ஜிஷா ஆஜரானார்.

Advertisement