நீலகிரி வணிகர் சங்கத்தினர் போராட்டம் நடத்த முடிவு
நீலகிரி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கூட்டம் நடந்தது.தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், மாவட்ட தலைவர் முகமது பரூக் தலைமை வகித்தார். செயலாளர் குலசேகரன், மாவட்ட பொருளாளர் லியாகத் அலி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விபரம்:
'நீலகிரி மாவட்டத்தில், ஏப்.,1ம் தேதி முதல், ஒரு நாளுக்கு, 6,000; சனி, ஞாயிறு நாட்களில், 8,000 சுற்றுலா வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும்,' என, சென்னை ஐகோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவால், வணிகர்களில் வியாபாரம் பாதிக்கப்படும். இதனை ரத்து செய்ய வலியுறுத்தி, வரும், 29ம் தேதி மாவட்ட முழுவதும், வணிகர் சங்கம் சார்பில், கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படும். இதற்கு தீர்வு கிடைக்கவில்லையேல், ஏப்., 2ம் தேதி, மாவட்டம் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வியாபாரிகள் பங்கேற்றனர்.