அரசு பள்ளியில் ஆண்டு விழா

புதுச்சேரி : தட்டாஞ்சாவடி அரசு தொடக்கப் பள்ளி ஆண்டு விழா நடந்தது.

விழாவிற்கு பள்ளித் துணை ஆய்வாளர் குலசேகரன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் நாகராஜ் முன்னிலை வகித்தார். ஆசிரியை நித்யா வரவேற்றார்.

தலைமை ஆசிரியர் கீதா ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில், பள்ளியின் முன்னேற்றத்திற்கு, நன்கொடை அளித்தவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

அதிக மதிப்பெண்கள், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் திறன் மேம்பாட்டு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து, மாணவர்களின் பாடல், தனி நடிப்பு, ஆங்கில நாடகம், தமிழ் நாடகம், நடனம், யோகா, கராத்தே போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

ஏற்பாடுகளை ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர். ஆசிரியை பிரேமா நன்றி கூறினார்.

Advertisement