தமிழக அரசு மீது ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் அதிருப்தி: மார்க்சிஸ்ட் மாநில செயலர் ஒப்புதல்

மதுரை: ''பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றாத தமிழக அரசின் மீது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தியில் இருப்பது உண்மை'' என்று மதுரையில் நடந்த மார்க்சிஸ்ட் கட்சி கூட்டத்தில் கட்சி செயலாளர் சண்முகம் பேசினார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு ஏப். 2 முதல் 6 வரை மதுரையில் நடக்க உள்ளது. அதையொட்டி தேனி மாவட்டக்குழு சார்பில் நடந்த சிறப்பு கருத்தரங்கில் மாநிலச் செயலாளர் சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் பாலபாரதி, பேராசிரியர் அருணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாநில செயலாளர் சண்முகம் கூறியதாவது: ஏப். 3 மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் கருத்தரங்கில் ஸ்டாலின், பினராயி விஜயன் பங்கேற்கின்றனர். 6ம் தேதி நடக்கும் பொதுக்கூட்டத்தில் தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் பங்கேற்கிறார்.
மதுரை மாநகராட்சி கூட்டத்தில் ஆளுங்கட்சிக்கு மெஜாரிட்டி உள்ளது என்ற காரணத்திற்காக மார்க்சிஸ்ட் கட்சி கவுன்சிலர்களின் எதிர்ப்பையும் மீறி ஆடு, கோழி, நாய் வளர்ப்புக்கு கட்டணம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்முறை சம்பவங்கள் தொடர்வது கவலை அளிக்கின்றது. அ.தி.மு.க. ஆட்சியிலும் இப்பிரச்னைகள் தொடர்ந்தது. ஆனால் தற்போது சம்பவம் நடந்த உடன் குற்றவாளிகள் கைது, சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
2021 சட்டசபை தேர்தலின் போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றுவது உள்ளிட்ட ஏராளமான சலுகைகளை தேர்தல் வாக்குறுதியில் தி.மு.க. அளித்தது. தற்போது வெளியான நிதிநிலை அறிக்கையில் பழைய ஓய்வூதியம் குறித்த எந்த வார்த்தைகளும் இல்லை. இது ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது உண்மை.
போராடும் உரிமை எல்லோருக்கும் உள்ளது, அதை பறிக்கும் வகையில் அச்சுறுத்தல் மிரட்டலை செய்வதை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றார்.






மேலும்
-
பிஸ்கட் மட்டும் போதும்; பேக்கரிக்கு விசிட் அடித்த கரடி!
-
இன்னுமா ஜாதியை பற்றி பேசுகிறீர்கள்? ராகுலுக்கு பா.ஜ., கேள்வி
-
பிஸ்கட் மட்டும் போதும்; பேக்கரிக்கு விசிட் அடித்த கரடி!
-
பிஸ்கட் மட்டும் போதும்; பேக்கரிக்கு விசிட் அடித்த கரடி!
-
தொகுதி மறுசீரமைப்பு கூட்டு குழு கூட்டம்: மம்தா புறக்கணிப்பு
-
கர்நாடகாவில் நாளை முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை முடங்க வாய்ப்பு