தொகுதி மறுசீரமைப்பு கூட்டு குழு கூட்டம்: மம்தா புறக்கணிப்பு

கோல்கட்டா: சென்னையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நாளை நடக்கும் கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டத்தை திரிணமுல் காங்கிரஸ் புறக்கணிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக ஆலோசிக்க சென்னையில் நாளை கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்கும்படி ஏழு மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மன் சென்னை வந்துள்ளனர். கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் நாளை காலை சென்னை வருகிறார். பிஜூ ஜனதா தளம், பாரதிய ராஷ்ட்ரீய சமீதி கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, தே.ஜ., கூட்டணியில் உள்ள ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், இக்கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் பங்கேற்காது என தகவல் வெளியாகி உள்ளது. அம்மாநிலத்தில் ஒரே மாதிரியான அடையாள அட்டை பிரச்னை உள்ளது. இது குறித்து மம்தா பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறார். இதற்கு தேர்தல் கமிஷன் விளக்கமளித்து வருகிறது. இந்த பிரச்னை பீஹார், கேரளா, தமிழகம், மேற்கு வங்க மாநிலங்களில் நடக்கும் சட்டசபை தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என மம்தா கருதுகிறார். இதனால், தற்போதைய நிலையில், இந்த பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அவர் முடிவெடுத்து உள்ளதாகவும், இதனால் சென்னையில் நாளை நடக்கும் கூட்டத்தில் அவரது கட்சி சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
பீஹார் சட்டசபைக்கு இந்தாண்டு தேர்தல் நடக்க உள்ள நிலையில், தமிழகம், கேரளா, மேற்கு வங்க சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது.





மேலும்
-
கொடிக்கம்பம் அகற்றும் விவகாரம் தி.மு.க.,வால் நெருக்கடி: மார்க்., கம்யூ
-
கொலை செய்யப்படாமல் இருப்பதற்கு மக்கள் சந்தோஷப்படலாம்: சீமான்
-
எஸ்.வி.சேகர் சரண் அடைய அவகாசம் அளித்தது கோர்ட்
-
வடக்கின் ஆதிக்கத்திற்கு தமிழகம் தலைவணங்காது; அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம்
-
போலீஸ் மிரட்டலால் ஓட்டம் பிடித்த பா.ஜ.,
-
அ.தி.மு.க., பற்றிய கூட்டல் கணக்கு ஏமாறாமல் இருக்க முதல்வர் வாழ்த்து