காஞ்சி மகா பெரியவர் அனுஷ உற்சவம் ; பக்தர்கள் தரிசனம்

மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில் காஞ்சி மகா பெரியவரின் அனுஷ உற்சவம் எஸ் எஸ் காலனி எஸ் எம் கே திருமண மண்டபத்தில் நடைபெற்றது . இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
அனுஷ உற்சவம் மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் மகா பெரியவா, உம்மாச்சி தாத்தா என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுகிற முக்தி அடைந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி மகா ஸ்வாமிகளின் திருநட்சத்திரமான அனுஷ உற்சவம் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு மகாபெரியவர் விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு திருமஞ்சனத்திரவியப் பொடி,. மஞ்சள் பொடி, பஞ்சகவ்யம், பால், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், திருநீறு, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைப் பெற்றது. தொடர்ந்து ருத்ரா அபிஷேகம் நடைப்பெற்றது.
இந்நிகழ்வினை சந்தோஷ் சாஸ்திரிகள் தலைமையிலான வேத விற்பன்னர்கள் நடத்தினர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார். இந்நிகழ்வில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
மேலும்
-
தி.மு.க., எம்.பி.,க்கள் இரட்டை வேடம்; வீடியோ வெளியிட்டு அண்ணாமலை குற்றச்சாட்டு
-
துாணைத் தொட்டால் ரூ.1,000 அபராதம்; மதுரை திருமலை நாயக்கர் மகால் நிர்வாகம் எச்சரிக்கை
-
வர்த்தகம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தணும்: பெல்ஜியம் மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு
-
பெற்ற மகனிடம் எப்படி நடந்துகொள்வது?
-
நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!
-
எல்லையில் 2,000 கேமராக்கள்... பாகிஸ்தானுக்கு செக் வைத்த பஞ்சாப் போலீஸ்