ஐபிஎல் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்ற யப் டிவி

ஐரோப்பா, ஜப்பான், சீனா, தென்கிழக்கு ஆசியா என சுமார் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் முன்னணி ஆன்லைன் இணையதள டிவியாக விளங்கும் 'யப் டிவி', இந்தியாவில் உள்ள பல மொழிகளில் இருக்கும் வெவ்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நிகழ்ச்சி, திரைப்படங்கள், கிரிக்கெட், ஆன்லைன் வகுப்புகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ஐபிஎல்-2025க்கான பிரத்யேக டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை 'யப் டிவி' பெற்றுள்ளது. 70 நாடுகளில் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்களை மனதில் வைத்து இந்த உரிமையை பெற்றது.

இந்த யப் டிவியில் 14 மொழிகளில் 250க்கும் மேற்பட்ட டிவி சேனல்களும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களும், 100க்கும் மேற்பட்ட டிவி நிகழ்ச்சிகளையும் கண்டுகளிக்கலாம். அத்துடன், தற்போது ஐபிஎல் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங்கும் பெற்றுள்ளதால், சந்தாதாரர்களுக்கு கூடுதல் அனுபவத்தை அளிக்க இருக்கிறது.

ஐபிஎல் 18வது சீசன் மார்ச் 22ல் துவங்கி மே 25 வரை நடைபெற இருக்கிறது. 10 அணிகள்; மொத்தம் 74 போட்டிகள் என கிட்டத்தட்ட 2 மாதங்கள் உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமையவுள்ளன. ஐபிஎல் போட்டிகளை தடையின்றி பார்க்கும் அனுபவத்தையும், புதுமையான டிஜிட்டல் அனுபவங்களையும் யப் டிவி வழங்குகிறது.

இது குறித்து யப் டிவி நிறுவனர் உதய் ரெட்டி கூறுகையில், ''ஐபிஎல்-ன் 18வது சீசனுக்கான டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையைப் பெற்றதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம். இது யப் டிவிக்கு மட்டுமின்றி, ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைப் பிரதிபலிக்கிறது. இது சர்வதேச சந்தைகளில் ஐபிஎல்-2025ன் இணையற்ற உற்சாகத்தை கொண்டு வருவது மட்டுமின்றி, மில்லியன் கணக்கான விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டி, கிரிக்கெட்டின் உலகளாவிய அந்தஸ்தை மேலும் உயர்த்தும் என்று உறுதியாக நம்புகிறோம்'' என்றார்.

சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.... : www.yupptv.com/cricket

Advertisement