வீடு புகுந்து 7 சவரன் நகை திருட்டு

எண்ணுார் எண்ணுார், வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் தீபன் சக்கரவர்த்தி, 32; தனியார் ஊழியர். நேற்று முன்தினம், மனைவியுடன் திருப்பதி சென்றுள்ளார்.

இந்நிலையில் நள்ளிரவு, 11:30 மணிக்கு வீடு திறந்திருப்பதை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர், எண்ணுார் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி, போலீசார் அங்கு வந்து பார்வையிட்ட போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, நகை, பணம் திருடு போனது தெரியவந்தது.

இது குறித்து, தீபன் சக்கரவர்த்தி, நேற்று மதியம், எண்ணுார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், 7 சவரன் தங்க நகைகள் மற்றும் 15,000 ரூபாய் திருடு போயிருப்பது தெரியவந்தது. 'சிசிடிவி' கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement