மூதாட்டியின் 3 சவரன் நகை மாயம்

தாம்பரம், சேலையூர் அடுத்த செம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி, 62. இவர், நேற்று முன்தினம், எல்.ஐ.சி., பணம் கட்டுவதற்காக, மகாலட்சுமி நகருக்கு சென்றார்.

பின் பூக்கடைக்கு சென்று, பூ வாங்கி கடைக்காரர் கொடுத்த மீதி பணத்தை வைக்க, மீண்டும் பையை திறந்தபோது உள்ளே இருந்த பர்ஸ் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அந்த பர்ஸில் மூன்று சவரன் நகை, 400 ரூபாய் இருந்தது. இது குறித்து, தாம்பரம் காவல் நிலையத்தில் மூதாட்டி புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement