தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவிகள்
வாலாஜாபாத், முதல்வர் ஸ்டாலின் 72வது பிறந்த நாளையொட்டி, மாவட்டம்தோறும் 72 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த அக்கட்சி தலைமை தீர்மானித்து கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக வாலாஜாபாத் ஒன்றிய தி.மு.க., சார்பில், பழையசீவரத்தில் நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.
வாலாஜாபாத் தி.மு.க., ஒன்றிய செயலர் சேகர் தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று பேசினார்.
தி.மு.க., அரசின் நான்கு ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள் குறித்து பட்டியலிட்டு பேசிய அவர், ''தமிழகத்தில் தொடர்ந்து தி.மு.க., ஆட்சியை கைப்பற்றுவது உறுதி,'' என்றார்.
அப்பகுதியை சேர்ந்த 500 பெண்களுக்கு, சேலை மற்றும் 5 கிலோ அரிசி உள்ளிட்ட நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதில், அக்கட்சியின் ஒன்றிய மற்றும் கிளை நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
விமானத்தில் நாயை அழைத்து செல்ல அனுமதி மறுப்பு; விரக்தியில் பெண் செய்த கொடூர செயல்!
-
அற்ப அரசியலால் தமிழக குழந்தைகள் பாதிப்பு; மும்மொழி விவகாரத்தில் மத்திய அமைச்சர் காட்டம்
-
வடக்கின் ஆதிக்கத்திற்கு தமிழகம் தலைவணங்காது; அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம்
-
திருப்பதியில் மும்தாஜ் ஹோட்டல் அனுமதி ரத்து ஏழு மலைகளும் பெருமாளுக்கே சொந்தம்; சந்திரபாபு நாயுடு
-
அப்துல் கலாம் பாராட்டிய நேர்மை மீனவருக்கு கொடுமை
-
ரசாயனம் கலந்த 1,500 கிலோ தர்ப்பூசணி வள்ளுவர் கோட்டத்தில் பறிமுதல்