அற்ப அரசியலால் தமிழக குழந்தைகள் பாதிப்பு; மும்மொழி விவகாரத்தில் மத்திய அமைச்சர் காட்டம்

22

புதுடில்லி: மும்மொழி கொள்கையை எதிர்க்கும் அற்பத்தனமான அரசியலால் தமிழக குழந்தைகள் பாதிக்கப்படக்கூடாது என்று மத்திய அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி கூறி உள்ளார்.



மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தி.மு.க.,வின் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.


இந் நிலையில், மும்மொழி கொள்கையை முன்வைத்து தமிழகத்தில் நடத்தப்படும் அற்பத்தனமாக அரசியல் நடவடிக்கைகளால் தமிழக குழந்தைகள் பாதிக்கப்படக்கூடாது என்று மத்திய அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி கூறி உள்ளார்.


இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது; உங்களின் இளம்வயதில் தான் அதிக மொழிகளை கற்றுக் கொள்ள முடியும். இந்த வயதில் அப்படியான மொழிகளை கற்றுக் கொள்வது மிகவும் எளிதான ஒன்று.


பலமொழிகள் கற்கும் வாய்ப்பு மும்மொழிக் கொள்கையில் உள்ளதால் அது பலன் தரும். இது அவர்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், உலகத்தில் எதிர்கொள்ளும் போட்டிகளை சமாளிக்கவும் உதவும். எனவே தமிழக குழந்தைகள் அற்பத்தனமாக அரசியல் நடவடிக்கைகளால் பாதிக்கப்படக்கூடாது.


இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement