இஸ்ரேலை கண்டித்துஎஸ்.டி.பி.ஐ., ஆர்ப்பாட்டம்


இஸ்ரேலை கண்டித்துஎஸ்.டி.பி.ஐ., ஆர்ப்பாட்டம்


நாமக்கல்:போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேலை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ., சார்பில் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நாமக்கல் - சேந்தமங்கலம் சாலை, ஜாமியா மஸ்ஜீத் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட பொதுச்
செயலாளர் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார். அதில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மக்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலை கண்டித்தும், பாலஸ்தீனர்களை உலக நாடுகள், ஐ.நா., சபை ஆகியவை காக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அதேபோல், நாமக்கல் திப்பு சுல்தான் ஜாமியா மஸ்ஜீத் முன் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முகமது இப்ராஹிம் தலைமை வகித்தார். ராசிபுரம் ஜாமியா மஸ்ஜீத் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட துணைத்தலைவர் சேக் நஜீர் தலைமை வகித்தார்.

Advertisement