நடுகல் விவகாரத்தில் சுமுக தீர்வு
நடுகல் விவகாரத்தில் சுமுக தீர்வு
குமாரபாளையம்:குமாரபாளையம் அருகே, தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம், வேளாங்காடு பகுதியில் ஒரு சமுதாயத்தினர், அவர்களது குடும்பத்தை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட இறந்தவர்களின் நினைவாக, மற்றொரு சமுதாயத்தினரின் பட்டா நிலத்தில் நினைவுக்கல் வைத்து வழிபட முயற்சித்தனர். இதற்கு நில உரிமையாளர், எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், நட்டு வைத்த நினைவு கற்களை அகற்றக்கோரி, போலீசில் புகாரளித்தார்.
அந்த பிரச்னை தீராத நிலையில், மீண்டும் அதே இடத்தில் நினைவுக்கல் வைத்து வழிபடுகிறோம் எனக்கூறி, 75க்கும் மேற்பட்டோர் திரண்டனர். இதற்கு நில உரிமையாளர் உள்ளிட்ட, நில உரிமையாளரின் சமுதாய மக்கள் பலரும் திரண்டதால், பரபரப்பான சூழல் நிலவியது. இதையடுத்து, ஆர்.டி.ஓ., தலைமையில், இரண்டு முறை நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து, மூன்றாவது பேச்சுவார்த்தையில், சுமுக தீர்வு ஏற்பட்டது. தாசில்தார் சிவக்குமார், இன்ஸ்பெக்டர் தவமணி ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும்
-
விமானத்தில் நாயை அழைத்து செல்ல அனுமதி மறுப்பு; விரக்தியில் பெண் செய்த கொடூர செயல்!
-
அற்ப அரசியலால் தமிழக குழந்தைகள் பாதிப்பு; மும்மொழி விவகாரத்தில் மத்திய அமைச்சர் காட்டம்
-
வடக்கின் ஆதிக்கத்திற்கு தமிழகம் தலைவணங்காது; அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம்
-
திருப்பதியில் மும்தாஜ் ஹோட்டல் அனுமதி ரத்து ஏழு மலைகளும் பெருமாளுக்கே சொந்தம்; சந்திரபாபு நாயுடு
-
அப்துல் கலாம் பாராட்டிய நேர்மை மீனவருக்கு கொடுமை
-
ரசாயனம் கலந்த 1,500 கிலோ தர்ப்பூசணி வள்ளுவர் கோட்டத்தில் பறிமுதல்