நாமக்கல் ஜி.ஹெச்.,யை பழைய இடத்திலேயேமீண்டும் அமைக்க கோரி த.வெ.க., ஆர்ப்பாட்டம்

நாமக்கல் ஜி.ஹெச்.,யை பழைய இடத்திலேயேமீண்டும் அமைக்க கோரி த.வெ.க., ஆர்ப்பாட்டம்


நாமக்கல்:'நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையை, பழைய இடத்திலேயே மீண்டும் அமைக்க வேண்டும்' என வலியுறுத்தி, த.வெ.க., சார்பில், நாமக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழக வெற்றிக்கழகத்தின், மேற்கு மாவட்டம் சார்பில், நேற்று நாமக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சதீஷ் தலைமை வகித்தார். இணை செயலாளர் சக்தி சதீஷ், பொருளாளர் பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், நாமக்கல் மாநகருக்குள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வந்தது. இதனால் போக்குவரத்து வசதிக்கு மிகவும் எளிதாக இருந்தது. ஏழை மக்கள் சிரமமின்றி பயன்படுத்தி வந்தனர். தற்போது, 6 கி.மீ., துாரம் தள்ளி, புதிய அரசு மருத்துவ கல்லுாரியில், அரசு தலைமை மருத்துவ
மனையை மாற்றியமைத்துள்ளனர். இதனால், முதியவர்கள், நோயாளிகள் இரண்டு பஸ் பிடித்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால், நாமக்கல் மாநகருக்குள், ஏற்கனவே இருந்த இடத்திலேயே அரசு மருத்துவமனை மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
மேற்கு மாவட்ட நிர்வாகிகள் மோகன், இளையராஜா, சாந்தி, கிருத்திகா உள்பட, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Advertisement