ரயில்வே ஊழியர் ஆர்ப்பாட்டம்


ரயில்வே ஊழியர் ஆர்ப்பாட்டம்


ஈரோடு:தென்னக ரயில்வே ஊழியர் சங்கம் சார்பில், ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் மாலை நேர ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. கோட்ட தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். ரயில்வே போர்டு விதிமுறைகள், அளவுகோலை பின்பற்றி அனைத்து கேட்டகிரியிலும் கூடுதல் தொழிலாளர்களை நிரப்ப வேண்டும். கடந்த, 2020 ஜன., முதல் 2021 ஜூன் வரை முடக்கப்பட்ட, 18 மாத கால டி.ஏ., மற்றும் டி.ஆர்.ஐ., உடனடியாக வழங்க வேண்டும். ரயில்வே புரடக்ஷன் பிரிவுகளை கார்ப்பரேட்களுக்கு வழங்குவதை திரும்ப பெற வேண்டும்.
ரயில்வே வேலைகளை கான்ட்ராக்ட் மற்றும் அவுட்சோர்சிங் முறையில் செய்வதை கைவிட வேண்டும். 12 மணி நேர பணியை, 8 மணி நேரமாக மாற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Advertisement