கிருஷ்ணராயபுரத்தில்கொசு ஒழிப்பு பணி



கிருஷ்ணராயபுரத்தில்கொசு ஒழிப்பு பணி

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து சார்பில், டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடந்தது.
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோவக்குளம், பிச்சம்பட்டி காலனி பகுதிகளில் கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., சார்பில், டெங்கு கொசு ஒழிப்பு பணி நடந்தது. இதில் தேவையில்லாத பிளாஸ்டிக் பொருட்கள், பழைய கழிவு பொருட்கள், தேங்காய் மட்டைகள், கொட்டாங்குச்சி ஆகியவை அகற்றப்பட்டது. மேலும் நல்ல குடிநீர் மூடி வைத்தல், குடிநீர் தொட்டிகள் பராமரிப்பு, கழிவு நீர் தேங்கிய இடங்களில் அதை அகற்றி பிளிச்சீங் பவுடர் தெளித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணிகளில் டவுன் பஞ்சாயத்து துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். டவுன் பஞ்சாயத்து சுகாதார மேற்பார்வையாளர் சண்முகம், நேரில் கள ஆய்வு பணிகளில் ஈடுபட்டார்.

Advertisement