மகளிரணிக்கு போலீசார் மிரட்டல்போராட்டத்தை வாபஸ் பெற்ற பா.ஜ.,
மகளிரணிக்கு போலீசார் மிரட்டல்போராட்டத்தை வாபஸ் பெற்ற பா.ஜ.,
ராசிபுரம்:ராசிபுரம் டாஸ்மாக் மதுபான கடை சுவரில், தமிழக முதல்வரின் படத்தை ஒட்ட வந்த, பா.ஜ., மகளிரணியினரை, போலீசார் மிரட்டியதால் போராட்டத்தை வாபஸ் பெற்று கலைந்து சென்றனர்.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில், சோதனையிட்ட அமலாக்கத்துறையினர், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதாகவும், அதற்கான ஆவணங்கள் கைப்பற்றி இருப்பதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து, சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை, கடந்த, 17ல் முற்றுகையிட சென்ற, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர்.
அதை கண்டித்து, நேற்று ராசிபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, டாஸ்மாக் மதுபான கடையில் முதல்வர் ஸ்டாலின் படத்தை ஒட்டப்போவதாக, ராசிபுரம் நகர, பா.ஜ., மகளிரணியினர் அறிவித்திருந்தனர். இதற்காக, நேற்று மதியம், 12:30 மணிக்கு மகளிரணியை சேர்ந்த மகேஸ்வரி, துர்காதேவி உள்ளிட்டோர், பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு வந்தனர். அங்கு வந்த ராசிபுரம் போலீசார், 'நேற்று வரை வழக்கு மட்டும் தான் போடச்சொல்லியிருந்தனர். ஆனால், இன்று கைது செய்ய உத்தரவிட்டுள்ளனர். வண்டியும் வந்துவிட்டது. இன்று கைது செய்தால் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் ஜெயிலுக்குள் தான் இருக்க வேண்டும். பெயில் எடுக்க முடியாது' என, அச்சுறுத்தும் வகையில் மிரட்டினர். இதைக்கேட்ட, பா.ஜ., மகளிரணியினர், 'போலீசார் கண்டிப்பாக இன்று கைது செய்து விடுவார்கள்' என, புலம்பியபடி போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
மேலும்
-
விமானத்தில் நாயை அழைத்து செல்ல அனுமதி மறுப்பு; விரக்தியில் பெண் செய்த கொடூர செயல்!
-
அற்ப அரசியலால் தமிழக குழந்தைகள் பாதிப்பு; மும்மொழி விவகாரத்தில் மத்திய அமைச்சர் காட்டம்
-
வடக்கின் ஆதிக்கத்திற்கு தமிழகம் தலைவணங்காது; அமைச்சர் தங்கம் தென்னரசு திட்டவட்டம்
-
திருப்பதியில் மும்தாஜ் ஹோட்டல் அனுமதி ரத்து ஏழு மலைகளும் பெருமாளுக்கே சொந்தம்; சந்திரபாபு நாயுடு
-
அப்துல் கலாம் பாராட்டிய நேர்மை மீனவருக்கு கொடுமை
-
ரசாயனம் கலந்த 1,500 கிலோ தர்ப்பூசணி வள்ளுவர் கோட்டத்தில் பறிமுதல்