அமைச்சர் பேச்சை கூட்டணி கட்சிகளுக்கு ஸ்டாலின் ஒளிபரப்புவாரா: அண்ணாமலை
சென்னை : ''தி.மு.க., அமைச்சர் அன்பரசன் பேசிய பேச்சை, கூட்டணி கட்சிகளுக்கு ஸ்டாலின் ஒளிபரப்புவார் என நம்புகிறோம்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அன்பரசன் பேசிய வீடியோ பதிவை நேற்று அண்ணாமலை வெளியிட்டார். அதில், அன்பரசன் பேசியதாவது:
தென் மாநிலங்களில் கேரளா, கர்நாடகா ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள், மத்திய அரசு தெரிவித்ததை ஏற்று, கட்டுக்கோப்பாக இருந்து, ஒண்ணு, ரெண்டுக்கு மேல, நம் ஆட்கள் யாரும் பெற்றுக் கொள்ளவில்லை. இதனால், மக்கள் தொகை குறைந்தது. வட மாநிலங்களில் உள்ளவர்கள், பன்றிக்குட்டி போடுவது போல் போட்டு, மக்கள் தொகையை எக்கச்சக்கமாக்கி விட்டனர். தற்போது, மக்கள் தொகைக்கு ஏற்ப தொகுதி சீரமைப்பு என்கின்றனர். நம் தொகுதிகள் அடிபட்டு போகுது.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அண்ணாமலை அறிக்கை:
முதல்வர் ஸ்டாலின் தொகுதி மறுவரையறை நிர்ணயம் குறித்த தன் மாயையான நாடகத்தை நடத்தும்போது, தி.மு.க., அமைச்சர் அன்பரசன் பேசிய பேச்சை, கூட்டணி கட்சிகளுக்கு ஒளிபரப்புவார் என்று நம்புகிறோம். வட மாநில சகோதர - சகோதரிகளை அவமதிக்கவும், துஷ்பிரயோகம் செய்யவும், தி.மு.க., அமைச்சர்கள் கூட்டு முடிவை எடுத்தது போல் உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
குடிநீர் குழாய் சீரமைப்பு பணிகள் எலுமியான்கோட்டூரில் தொய்வு
-
கூரை கான்கிரீட் பெயர்ந்த வி.ஏ.ஒ., அலுவலகம்
-
ஏனாத்துாரில் கணினி தொழில்நுட்ப கருத்தரங்கம்
-
காஞ்சி மாநகராட்சி நடப்பாண்டில் ரூ.22.5 கோடி ரூபாய் சொத்து வரி வசூல்
-
கல்குவாரி அமைப்பதை கண்டித்து மாம்புதுாரினர் உத்திரமேரூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகை
-
அங்கம்பாக்கம் ஊராட்சி பள்ளியில் நூற்றாண்டு விழா