அங்கம்பாக்கம் ஊராட்சி பள்ளியில் நூற்றாண்டு விழா
வாலாஜாபாத், வாலாஜாபாத் அடுத்த, அங்கம்பாக்கம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்குகிறது. 1925ம் ஆண்டு, இங்கு திண்ணைப் பள்ளி துவங்கப்பட்டு, பின் தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி என, தரம் உயர்த்தப்பட்டது.
தற்போது, இப்பள்ளி துவங்கி, 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, பள்ளியின் நூற்றாண்டு விழா நேற்று நடந்தது.
அப்பள்ளி தலைமை ஆசிரியர் தணிகைவேல் மற்றும் அங்கம்பாக்கம் ஊராட்சி தலைவர் ஏழுமலை ஆகியோர் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
உத்திரமேரூர் தி.மு.க.,- - எம்.எல்.ஏ., சுந்தர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, தொடக்க கல்வி அலுவலர் எழில் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் மற்றும் கிராம முக்கியஸ்த்தர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பள்ளியின் வளர்ச்சி அனுபங்கள் குறித்து பேசினர்.
ஆண்டு விழாவில், பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ - மாணவியர் மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டன.
மேலும்
-
கட்டுக்கதைக்கும் அளவு இல்லையா?
-
'டவுட்' தனபாலு
-
ஆளுங்கட்சி கவுன்சிலர் வீட்டுக்கு ஆண்டு வரி ரூ.211 தான்!
-
கழிவுநீரோடை குழியில் புதைத்து கான்கிரீட் கலவையால் மூடி பங்குதாரர் கொலை; கேட்டரிங் உரிமையாளர் உள்ளிட்ட நால்வர் கைது
-
தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் பா.ம.க., உள்ளே; வேல்முருகன் வெளியே?
-
வேலை என்னை மாற்றியது!