அறிவிப்பு பலகை திறப்பு

சின்னசேலம்: சின்னசேலத்தில், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் செல்வதற்கான வழியை குறிக்கும் அறிவிப்பு பலகை திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

சின்னசேலம் பேரூராட்சியில், 73 குடியிருப்புகளை கொண்டு, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. அந்த முகாமிற்கு செல்வதை குறிக்கும் அறிவிப்பு பலகை எதுவும் வைக்கப்படவில்லை. இந்த நிலையில், பேரூராட்சி நிர்வாகம் சார்பில், அங்கு புதிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. சேர்மன் லாவண்யா அந்த அறிவிப்பு பலகையை திறந்து வைத்தார். இதில் முகாம் வருவாய் ஆய்வாளர் உமா, முகாம் தலைவர் மோகன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

Advertisement