வதந்திகளை நம்ப வேண்டாம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பெரிய மாரியம்மன் கோயில் செயல் அலுவலர் ஜோதிலட்சுமி கூறியதாவது; மார்ச் 29ல் நடைபெறும் பூக்குழி திருவிழாவில் பூ இறங்கும் பக்தர்களின் எண்ணிக்கை கணக்கிட கைபட்டை வழங்கப்பட உள்ளது.

இதனை பூக்குழி நாளன்று அதிகாலை கோயில் காப்பு சீட்டுடன் கை பட்டை பெற்றுக் கொண்டு காப்பு கட்டிக் கொள்ளலாம்.

இதற்கு முன்பதிவோ, ஆதார் அட்டை நகலோ தேவையில்லை.

வீண் வதந்திகளை பக்தர்கள் எவரும் நம்ப வேண்டாம் என்றார்.

Advertisement