மதுரையில் நள்ளிரவில் ஒருவர் வெட்டிக்கொலை; 2 தனிப்படைகள் அமைப்பு

7


மதுரை: மதுரை மாநகராட்சி தி.மு.க., முன்னாள் மண்டல தலைவர் குருசாமியின் ஆதரவாளர் காளீஸ்வரன் நேற்றிரவு வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கை விசாரிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.



மதுரை தனக்கன்குளம் பகுதியில், நேற்றிரவு வீட்டின் வெளியே வந்த காளீஸ்வரனை 3 பைக்குகளில் வந்த மர்மநபர்கள் வெட்டி படுகொலை செய்தனர். வி.கே.குருசாமிக்கும், அ.தி.மு.க.,வை சேர்ந்த ராஜபாண்டிக்கும் இடையே பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்தது.



இரு தரப்பினருக்கு இடையே மோதல் காரணமாக 15க்கும் மேற்பட்ட கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் பழிக்கு பழியாக காளீஸ்வரன் கொலை செய்யப்பட்டு இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.


இதன் பின்னணியில் ராஜபாண்டியின் உறவினரான பிரபல ரவுடி வெள்ளைக்காளியின் பங்கு இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர். இந்த வழக்கை விசாரிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் பெங்களூருவில் வி.கே.குருசாமி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement