இந்திய கம்யூ., கூட்டம்

காரியாபட்டி: காரியாபட்டியில் இந்திய கம்யூ., சார்பாக நல்லகண்ணு நூற்றாண்டு விழா பேரவை கூட்டம், தாலுகா குழு உறுப்பினர்கள் முருகேசன் தலைமையில், குருசாமி முன்னிலையில் நடந்தது.

சுந்தர்ராஜ் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ., ராமசாமி, மாவட்ட செயலாளர் லிங்கம், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் பொன்னு பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார் பேசினர்.

தாலுகா துணை செயலாளர் ஞானக்குமார் நன்றி கூறினார்.

கூட்டத்தில், மதுரை - திருச்செந்தூர், தூத்துக்குடி செல்லும் பஸ்கள் காரியாபட்டி பஸ் ஸ்டாண்ட் வந்து செல்ல நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement