ஆக்கிரமிப்பு பெட்டி அகற்றம்

பண்ருட்டி; பண்ருட்டி சார் பதிவாளர் அலுவலகம் முன்பு ஆக்கிரமிப்பு செய்து வைத்த இரும்பு பெட்டி 'தினமலர்' செய்தி எதிரொலியால் அகற்றப்பட்டது.

பண்ருட்டி சார் பதிவாளர் அலுவலகம் முன்பு கடந்த 20 நாட்களுக்கு முன் இரும்பு பெட்டியை வைத்து ஆக்கிரமிக்கப்பட்டது. இதனால் சார் பதிவு அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் போக்குவரத்து போலீஸ் நிலையம் வழியாக சென்று வந்தனர்.

இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து நேற்று முன்தினம் ஆக்கிரமிப்பை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில், நகராட்சி சார்பில் இரவோடு இரவாக இரும்பு பெட்டி அகற்றப்பட்டது.

Advertisement