தொகுதி மறுவரையறை விவகாரம்: சட்டத்திருத்தம் கொண்டு வர ஜெகன் ரெட்டி வலியுறுத்தல்

ஹைதராபாத்: தொகுதி மறு வரையறை விவகாரத்தில் எந்த மாநிலமும் பாதிக்கப்படாத வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று, பிரதமர் மோடிக்கு, ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் ரெட்டி கடிதம் அனுப்பியுள்ளார்.
ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம்:
தொகுதி மறுசீரமைப்பு என்பது சில மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் பொதுமக்களின் உணர்வுகளில் தாக்கம் ஏற்படுத்தக்கூடியது. 1971ம் ஆண்டு இருந்த தென் மாநிலங்களின் மக்கள் தொகை, 2011ல் 4 சதவீதம் வரை குறைந்துள்ளது.
இதற்கு தென் மாநிலங்கள் தேசிய முன்னுரிமை கொடுத்து மக்கள் தொகை கட்டுப்பாட்டு திட்டங்களை செயல்படுத்தியதே காரணம்.
எனவே மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால், தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறைந்து விடும். எனவே, எந்த மாநிலமும் பாதிக்கப்படாத வகையில், ஒவ்வொரு மாநிலத்துக்கும் விகிதாச்சார அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டுகிறேன்.
நாட்டின் அரசியல், சமூக நல்லிணக்கத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் தன்மை கொண்ட விவகாரம் என்பதால், பிரதமர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்; மாநிலங்களின் அச்சத்துக்கு முடிவு கட்ட வேண்டும். இவ்வாறு ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.






மேலும்
-
காங்கிரஸ் ஆட்சியில் சுயசார்பு இந்தியா: கார்கே
-
பராம்பரியங்களை பதிவு செய்யும் நவீன்ராஜ்.
-
தமிழக முதல்வருக்கு ஜார்க்கண்ட் முதல்வர் சோரன் ஆதரவு!
-
அமெரிக்க சட்டத்தை மதித்து நடக்க வேண்டும்: மாணவர்களுக்கு இந்தியா அறிவுரை
-
பார்களில் பெண்கள் வேலைக்கு எதிர்ப்பு; பா.ஜ., மகளிர் அணியினர் முற்றுகை போராட்டம்
-
சுனிதா வில்லியம்சுக்கு கூடுதல் சம்பளமா: டிரம்ப் என்ன சொல்கிறார்