தண்ணீர் பந்தல் திறப்பு

ஸ்ரீமுஷ்ணம்; ஸ்ரீமுஷ்ணத்தில் பேரூராட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது.

பேரூராட்சி செயல்அலுவலர் யசோதா தலைமை தாங்கினார். வார்டு கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி சேர்மன் செல்வி ஆனந்தன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி, நீர், மோர் வழங்கினார். விழாவில், துணைத் தலைவர் முத்தமிழரசி பார்த்திபன், பேரூராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement