குத்துச்சண்டை ஜாம்பவான் ஜார்ஜ் போர்மேன் மரணம்

வாஷிங்டன்: கடந்த 1968ல் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற குத்துச்சண்டை ஹெவி வெயிட் சாம்பியன் ஜார்ஜ் போர்மேன் மரணம் அடைந்தார்.

அமெரிக்காவை சேர்ந்த குத்துச்சண்டை ஜாம்பவான் ஜார்ஜ் போர்மேன் 76, உடல்நலக்குறைவால் மரணம் அடைந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஜார்ஜ் போர்மேன், 1968 ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர். 21 ஆண்டு இடைவெளிக்கு பின்இரண்டு முறை குத்துச்சண்டை ஹெவிவெயிட் சாம்பியன் பட்டம் வென்றவர். 45 வயதில் சாம்பியன் பட்டம் வென்று மிக வயதான இரண்டாவது வீரர் என்ற பெருமை பெற்றார்.

1974ம் ஆண்டு நடந்த பிரபலமான ரம்பிள் இன் தி ஜங்கிள் போட்டியில் முகமது அலியிடம் தோல்வியை தழுவினார்.1997ம் ஆண்டு அவர் குத்துச்சண்டை போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

தொழில் முறை போட்டிகளில் குத்துச்சண்டை வரலாற்றில் 68 நாக் அவுட் உள்பட 76 போட்டிகளில் வெற்றி பெற்று பெருமை சேர்த்துள்ளார்.

முன்னாள் உலக ஹெவிவெயிட் சாம்பியன் மைக் டைசன், ஜார்ஜ் போர்மேன் மரணம் குறித்து கூறுகையில்,"குத்துச்சண்டைக்கும் அதற்கு அப்பாலும் அவரது பங்களிப்பு ஒருபோதும் மறக்கப்படாது" என்றார்.

Advertisement