தொகுதி மறுசீரமைப்பு குறித்து மாநிலங்களுடன் பேசுங்க: மத்திய அரசுக்கு கேரளா முதல்வர் வலியுறுத்தல்

சென்னை: 'தொகுதி மறுசீரமைப்பு குறித்து மாநிலங்களுடன் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும்' என கேரளா முதல்வர் பினராயி விஜயன் பேசினார்.
இந்தியாவின் பலம்
சென்னையில் நடந்த தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டுக்குழு கூட்டத்தில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது: இந்தியாவின் பலம். மத்திய அரசு மாநிலங்களுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். எண்ணிக்கை மட்டுமல்ல.
இது இந்தியாவின் ஆன்மா சம்பந்தபட்ட விவகாரம். தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் தெளிவுபடுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை. மாநிலங்களை ஒன்றிணைத்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. இந்த கூட்டத்தில் இருந்து தொகுதி மறுசீரமைப்புக்கான எதிர்ப்பு துவங்கும்.
மத்திய அரசின் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் கொள்கையை நடைமுறைப்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படுகின்றன. தேசத்திற்கான நமது கடமையை நிறைவேற்றினோம். தற்போது தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் நாம் தண்டிக்கப்பட்ட உள்ளோம். தொகுதி மறுசீரமைப்பே தற்போது முக்கிய பிரச்னையாக இருக்கிறது. நமது பார்லிமென்ட் பிரதிநிதித்துவம் குறைந்தால், நமக்கு உரிமையான நிதியை இழக்க நேரிடும்.
நமது அரசியல் குரலையும் இழந்து விடுவோம். இந்த சூழலின் அபாயத்தை கருத்தில் கொண்டு தான், தமிழக முதல்வர் இந்த கூட்டத்தை கூட்டியுள்ளார். நிதிக் கொள்கை, மொழிக்கொள்கை, கலாசார கொள்கை, இப்போது பிரதிநிதித்துவத்தை நிர்ணயிக்கும் பிரச்னையில் மத்திய அரசின் செயல்பாடுகள், நமது கூட்டாட்சி முறையையும், ஜனநாயக நடைமுறைகளையும் சிதைப்பதாக உள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.
போராடுவோம்
கூட்டத்தில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதாவது: கட்சி வேறுபாடுகளை களைந்து போராடுவோம். மக்கள் தொகை கட்டுப்பாட்டில் சிறப்பாக செயல்பட்டதற்கு தண்டனை தான் தொகுதி மறுசீரமைப்பு. டில்லியில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
டில்லியில் முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பா.ஜ., நம்மை பேச அனுமதிப்பதில்லை. அவர்கள் நினைப்பதை முடிவாக எடுக்கிறார்கள். தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளேன்.
மத்திய அரசின் நிதிப் பங்கீட்டிலும் மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தைப் போலவே மக்கள் தொகையை கட்டுப்படுத்திய பிற மாநிலங்களுக்கும் நிதிப்பங்கீட்டில் அநீதி இழைக்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லாததால் மத்திய அரசு விருப்பம் போல் சட்டங்களை நிறைவேற்றுகிறது. நியாயமான தொகுதி வரையறையை வலியுறுத்தும் வகையில் கூட்டு நடவடிக்கைக்குழுவின் அடுத்த கூட்டம், ஹைதராபாத்தில் நடத்தப்படும்:
இவ்வாறு அவர் பேசினார்.







நவீன் பட்நாயக் பேச்சு
கூட்டத்தில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் பேசியதாவது:
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் லோக்சபா தொகுதிகளை ஒடிசா இழக்கும். இது, மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதி. அதை எதிர்த்து பிஜூ ஜனதாதளம் போராடும்.
நாட்டின் வளர்ச்சிக்காக நாம் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி உள்ளோம். வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தில் நாம் அளித்த நேர்மறையான பங்களிப்பின் காரணமாக, மக்கள் தொகை பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றிய மாநிலங்களை தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் தண்டிக்கக்கூடாது. நமது ஜனநாயகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த விவகாரம் பற்றி அனைத்து கட்சிகளையும் ஆலோசித்த பிறகே, மத்திய அரசு தொகுதி மறு சீரமைப்பை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
பெயர்ப்பலகை
கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களின் பெயர்களை, அவர்களது இருக்கை முன் அவரவர் தாய்மொழி மற்றும் ஆங்கிலத்தில் குறிப்பிட்டு பெயர்ப்பலகை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.










மேலும்
-
பாளையம் அண்ணா
-
ஆக்ஸ்போர்டு பல்கலை செல்லும் மம்தா: பெருமைக்குரிய விஷயம் என்கிறார் கவர்னர்
-
கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது ஐ.பி.எல்., திருவிழா; ஷாருக்கானுடன் நடனமாடி கோலி குதூகலம்
-
எம்.எல்.ஏ., எண்ணிக்கையை அதிகரித்தாலே போதும்; பி.ஆர்.எஸ்., கட்சி
-
குழந்தை திருமணங்கள்: ஒடிசாவில் தொடரும் அவலம்!
-
காங்கிரஸ் ஆட்சியில் சுயசார்பு இந்தியா: கார்கே