மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிதிஷ் குமார் பதவி விலகணும்; பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தல்

பாட்னா: 'பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார். அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்' என்று ஜன் சுராஜ் கட்சி தலைவரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தி உள்ளார்.
பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் பாட்னாவில் 'செபாக் தக்ராவ்' எனப்படும் கிக் வாலிபால் உலகக் கோப்பை போட்டி துவக்க விழா நடந்தது. நிகழ்ச்சியில் தேசிய கீதம் ஒலித்த போது முதல்வர் நிதிஷ் குமார், தன் அருகில் இருந்த பீஹார் அரசின் முதன்மைச் செயலர் தீபக் குமாரின் தோளை தட்டி சிரித்துப் பேசினார்.
தேசிய கீதம் முடிவடையும் முன்பே, மேடையை விட்டு இறங்கிச் சென்றார். இதை பார்த்த கட்சியினர் மற்றும் அதிகாரிகள் செய்வதறியாது திகைத்தனர். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி விமர்சனத்தை கிளப்பியது. இது தொடர்பாக, ஜன் சுராஜ் கட்சி தலைவரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டி:
நிதிஷ் குமாரின் உடல்நிலை குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பே கருத்து தெரிவித்தவர் அவருடன் கூட்டணியில் இருந்த சுசில்குமார் மோடி. இதையடுத்து, அவரது உடல்நிலை குறித்து பீகார் அமைச்சர்கள் பலர் கருத்து தெரிவித்து விட்டனர். நான் ஜனவரி வரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
மாநிலத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இருப்பது குறித்து நிதிஷ் குமார் தெரியாமல் இருப்பதை கண்டு, நிதிஷ் குமாரின் மன நிலை மிகவும் மோசமடைந்துள்ளது என்பதை அறிந்தேன். நிதிஷ்குமார் உடல் ரீதியாக சோர்வாகவும், மன ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
நிதிஷ்குமார் பதவி விலக வேண்டும். ஆனால், நிதிஷ் குமார் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது பிரதமருக்கோ உள்துறை அமைச்சருக்கோ தெரியாமல் இருப்பது சாத்தியமில்லை என்பதால் பா.ஜ.,விற்கும் இந்த விவகாரத்தில் சரிபாதி பங்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.




மேலும்
-
எங்கும் ஊழல் எதிலும் ஊழல்; தி.மு.க.,வை விளாசிய அண்ணாமலை
-
ஏ.ஐ., நம்ம வேலையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது
-
சர்வதேச சந்தையை கலக்கும் இந்தியாவின் 'கோலி சோடா' புதுமையால் புத்துயிர் பெறும் பாரம்பரியம்
-
15 லட்சம் ரூபாய் லஞ்சம்: தேசிய நெடுஞ்சாலை துறை மேலாளர் கைது
-
நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; மக்கள் அச்சம்!
-
மாணவர்கள் எம்புரான் படம் முதல் ஷோ பார்க்கணும்: ரிலீஸ் நாளில் விடுமுறை விட்ட கல்லூரி