சைப்ரஸ் செஸ்: ஹரிகா வெற்றி

நிகோசியா: சைப்ரஸ் செஸ் தொடரின் 6வது சுற்றில் இந்தியாவின் ஹரிகா வெற்றி பெற்றார்.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் பெண்களுக்கான கிராண்ட் ப்ரி தொடர் நடக்கிறது. இதன் 4வது கட்ட போட்டிகள் சைப்ரசில் நடக்கின்றன. இந்தியாவின் ஹரிகா துரோணவள்ளி, திவ்யா தேஷ்முக் உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர்.
இதன் 6வது சுற்றில் ஹரிகா, ஜார்ஜியாவின் நானா மோதினர். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய ஹரிகா, 65வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் திவ்யா, கிரீசின் ஸ்டாவ்ரூலா சோலாகிடோ மோதினர். இதில் திவ்யா, 41வது நகர்த்தலில் போட்டியை 'டிரா' செய்தார்.
ஆறு சுற்றுகளின் முடிவில் ஹரிகா (3.5 புள்ளி), திவ்யா (2.5) முறையே 5, 6வது இடத்தில் உள்ளனர். உக்ரைனின் அனா முசிசுக் (4.5 புள்ளி) முதலிடத்தில் நீடிக்கிறார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஷீத்தல் தேவி மீண்டும் 'தங்கம்': பாரா விளையாட்டு வில்வித்தையில்
-
செபக்தக்ரா: இந்தியா 'வெள்ளி'
-
பள்ளியில் ஜாதி ரீதியாக மாணவர்கள் மோதல்: தேர்வுக்காலம் என்பதால் கண்டித்து அனுப்பிய நீதிபதி!
-
கேரளா பா.ஜ., தலைவராகிறார் ராஜிவ் சந்திரசேகர்; விரைவில் வெளியாகும் அறிவிப்பு
-
ரன் மழைக்கு முன் இசை மழை; கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்த அனிருத்!
-
வரி சேமிப்பு திட்டங்களில் முதலீட்டை தொடர்வது ஏன் அவசியம்?
Advertisement
Advertisement